‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..!


‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..!

குறுகிய காலத்தில் சினிமா ரசிகர்களை தன் நடிப்பாலும் தன் பாடல்களாலும் கவர்ந்தவர் ஆண்ட்ரியா.

கமல், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் நாளை வெளியாகவுள்ள இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நடித்துள்ளார்.

இப்படம் பற்றி ஆண்ட்ரியா கூறியதாவது….

சிம்புவுடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். இந்த படம் எனக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது.

சூட்டிங் என்று வந்துவிட்டால் அடுத்த நொடியே சிம்பு ஒரு நடிப்பு அசுரன் போல ஆகவிடுவார். சிம்புவின் நடிப்பை கண்டு நான் பலமுறை ஆச்சரியம் அடைந்துள்ளேன்.

எந்த படமாக இருந்தாலும் என் கேரக்டர் வலிமையானதா என்பதை பார்ப்பேன். அந்த வகையில் இந்தப்படம் அமைந்துள்ளது” என்றார்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை டி ராஜேந்தர் தயாரித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது.