மூன்று முகம்… மூன்று ஹீரோயின்ஸ்… சிம்பு சூப்பர் ப்ளான்..!


மூன்று முகம்… மூன்று ஹீரோயின்ஸ்… சிம்பு சூப்பர் ப்ளான்..!

சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ‘கான்’ பல பிரச்சினைகளால் முடங்கியுள்ளது.

இந்நிலையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார் சிம்பு.

ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறாராம். எனவே மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது.

மே மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படவுள்ள இப்படத்தை விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’ படத்தை தயாரித்த ரேபெல் நிறுவனம் தயாரிக்கிறது.