பீப் பாடலில் மாட்டிய சிம்பு எங்கே? எப்படி இருக்கிறார்?


பீப் பாடலில் மாட்டிய சிம்பு எங்கே? எப்படி இருக்கிறார்?

பீப் பாடல் பாடி சிக்கி சின்னா பின்னமானவர் சிம்பு. கோர்ட் கேஸ், போராட்டம், அறிக்கை, எதிர்ப்பு என பல போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் சிம்பு எங்கே சென்றார்? என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்துள்ளது.

சமீபத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் அவரது படங்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் மர்மமாக இருந்து வருகிறது.

இதனிடையில் சிம்பு தன்னுடை நெருங்கிய நண்பர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்ததாகவும் தற்போது மீண்டும் சென்னைக்கு வந்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதால் அதனை இவரே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இதன் இயக்குனர் பாண்டிராஜ் மற்ற படங்களில் பிஸியாகி விட்டதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர சிம்பு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.