உஷாரான சிம்பு… இனியாவது பட்டைய கிளப்புவாரா…?


உஷாரான சிம்பு… இனியாவது பட்டைய கிளப்புவாரா…?

செல்வராகவன் இயக்கத்தில் கான் படத்தில் நடித்தார் சிம்பு. இப்படம் என்ன ஆனது? என்பது அவர்களுக்கே தெரிந்த ரகசியம். இதனிடையில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் நடித்து வந்தார்.

இப்படத்தின் இடம்பெற்ற ‘தள்ளிப் போகாதே’ பாடல் சிங்கிள் ட்ராக் வெளியாகி சாதனை படைத்து வந்தாலும், படத்தின் ரிலீஸ் குறித்த எவ்வித தகவலும் இல்லை.

அதோ… இதோ என்று கூறப்பட்ட பாண்டிராஜ் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படமும் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுநாள் பொறுத்திருந்த சிம்பு, இனி சரிவராது என தற்போது உஷாராகிவிட்டாராம்.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘மூன்று முகம்’ என பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ‘வாலு’ பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளார். இது தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கி ஜூனியர் என்டிஆர்-காஜல் அகர்வால் நடித்து ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனியாவது படங்களை வெளியிட்டு சிம்பு பட்டைய கிளப்புவார் என எதிர்பார்ப்போம்..