‘மிருதன்’ உடன் இணையும் சிம்புவின் ‘வாலு’ கூட்டணி..!


‘மிருதன்’ உடன் இணையும் சிம்புவின் ‘வாலு’ கூட்டணி..!

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ‘வாலு’ படம் கடந்தாண்டு வெளியானது. தமன் இசையமைத்த இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தின் வெளியீட்டின் போது நிறைய பிரச்சினைகளை சந்தித்தால், படத்தின் இயக்குனருக்காக இப்படம் வெளியாக வேண்டும் என சிம்பு கேட்டுக் கொண்டார்.

பல கட்டப் பிரச்சினைகளுக்கு பின் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மீண்டும் சிம்பு நடிக்க ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். இப்படத்தை ஈட்டி, மிருதன் உள்ளிட்ட படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.