‘ஏ’ படம் பார்த்து பாராட்டித் தள்ளிய சிம்பு!


‘ஏ’ படம் பார்த்து பாராட்டித் தள்ளிய சிம்பு!

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் இளைஞர்களிடையே (மட்டும்) நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ், ஆர்யா, சிம்ரன், ப்ரியா ஆனந்த், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இன்றைய இளைய சமுதாயத்தை கெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பலத்தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்ற “எங்கடா பொண்ணுங்கள விட்டு வைக்கிறீங்க….’, ‘இனிமே கை வேலைதானா?..’, ‘பிட்டு படம் பார்க்காம இருப்பியா?’ உள்ளிட்ட ஆபாச வசனங்களை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை சிம்பு பார்த்துள்ளார். படம் பார்த்த அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்… “ஜி.வி. பிரகாஷின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் பார்த்தேன். என்ஜாய் செய்து பார்தேன். துணிச்சலான படம். இன்றைய தலைமுறைக்கான படம். ஜி.வி. பிரகாஷ் நடிப்பிலும் இசையிலும் பின்னியெடுத்துள்ளார். இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.