சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!


சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

ஜி.வி. பிரகாஷ்-ஆனந்தி நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஒரு பிட்டு படமாக கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதன்பின்னர் சிம்பு நடிக்க ஒரு படத்தை இயக்கவிருப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்தார்.

இதனிடையில் சிம்பு பாடிய பீப் பாடல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

எனவே, சிம்புவும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் கூட்டணி பற்றி பரப்பரப்பாக பேசப்பட்டது.

தற்போது இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற பெயரிட்டுள்ளனர்.

சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.