பீருடன் பீப் பாடலும் சேர்ந்தது… புத்தாண்டு கொண்டாட்டம் ஜோர்..!


பீருடன் பீப் பாடலும் சேர்ந்தது… புத்தாண்டு கொண்டாட்டம் ஜோர்..!

பீப் பாடல் விவகாரம் 2015ஆம் ஆண்டோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால் அது 2016ஆம் ஆண்டிலும் தொடரும் என்றே தெரிகிறது.

இந்த 2016ஆம் ஆண்டை வரவேற்க சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன்.

இந்நிலையில் சென்னையிலுள்ள ஒரு ‘பப்’பில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான ‘பீப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடலுக்கு இளைஞர்கள் தங்கள் ஜோடிகளுடன் உற்சாகத்துடன் நடனமாடினர். அங்கிருந்த எவரும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பீப் பாடல் பாடிய சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் போராடி வரும் நிலையில் இளைஞர்கள் அப்பாடலுக்கு நடனமாடி புத்தாண்டை வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.