சிம்புவின் திருப்புமுனை படம் ‘இது நம்ம ஆளு’– பாண்டிராஜ்


சிம்புவின் திருப்புமுனை படம் ‘இது நம்ம ஆளு’– பாண்டிராஜ்

பிரிந்த காதலர்கள் படத்திற்காக ஒன்று சேர்ந்ததால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் ‘இது நம்ம ஆளு’. இவர்களை சேர்த்து வைத்த புண்ணியம் இயக்குனர் பாண்டிராஜையே சேரும்.

இப்படத்தில் சிம்பு-நயன்தாரா ஜோடியுடன் ஆண்ட்ரியா, சந்தானம், சூரி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க சிம்புவின்  தம்பி குறளரசன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்து விட்டன. நிதி நெருக்கடி காரணமாக படம் முடிவடையாமல் உள்ளது.

இதனிடையே பாண்டிராஜ் அவர்கள் சூர்யாவின் ‘ஹைக்கூ’  படத்தை இயக்க சென்றுவிட்டார். இதன் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எனவே படத்தை உடனே முடித்து தருமாறு டி.ஆர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது படம் குறித்து பாண்டிராஜ் கூறியதாவது… “’இது நம்ம ஆளு’ படம் சிம்புவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். அவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கும். புது கோணத்தில் சிம்புவை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறேன். அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படம் விரைவில் வெளியாகும்” என்றார்.