தல வழியில் வாலு… சிம்பு வழியில் புதுமுக நடிகர்..!


தல வழியில் வாலு… சிம்பு வழியில் புதுமுக நடிகர்..!

தல எவ்வழியோ தானும் அவ்வழியே… என்று அஜித்தை பின்பற்றி வருபவர் ‘வாலு’ நாயகன் சிம்பு. தற்போது சிம்பு வழியில் ஒரு புதுமுக நடிகர் யஷ்மித்தும் சேர்ந்துள்ளார்.

கெளதம்மேனன், சிம்பு இணைந்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா” படத்தில் இடம் பெற்ற ‘தள்ளிப் போகாதே’ என்ற பாடல் ஹிட்டானது. எனவே, இப்பாடலுக்கான கவர் வெர்ஷன் (Cover Version) பாடலை பாடி யூடியூப்பில் வெளியிட்டிருந்தார் சிம்பு.

இதனைத் தொடர்ந்து ‘ராஜா ராணி’ படத்தில் இடம்பெற்ற “சில்லென ஒரு மழைத்துளி” பாடலுக்கான கவர் வெர்ஷன் பாடலும் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இதனை புதுமுக நடிகர் யஷ்மித் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இவர் யூகன் படத்தில் ஹீரோவாக நடித்தவர். தற்போது முத்துகுமார் இயக்கத்தில் எந்த நேரத்திலும் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.