தேர்தல் வந்தாச்சு… சிம்பு பாட்டு ஹிட்டாச்சு…!


தேர்தல் வந்தாச்சு… சிம்பு பாட்டு ஹிட்டாச்சு…!

சிம்பு எது பேசினாலும், செய்தாலும் கூடவே ஒரு சர்ச்சையும் உருவாகிவிடும். சில மாதங்களுக்கு முன்பு பீப் பாடல் பாடி பல வேதனைகளை அனுபவித்தார்.

அதன்பின்னர், நடிகர் சங்கத்தில் இருந்து விலக போகிறேன் என பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் நேரம் என்பதால், விழிப்புணர்வு பாடலான வோட்டு பாட்டு ஒன்றை உருவாக்கி, பாடியிருக்கிறார்.

அந்த பாடலின் வரிகள் இதோ உங்கள் பார்வைக்காக….

 

ஓட்டு போட வேண்டியது உன் கடமை

போடலைன்னா அது உன் மடமை

எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை

அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை

 

நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப

உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப

எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப

தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப

 

போடாம விட்டது பலவாட்டி

போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி

போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு

போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு

என்று சிம்பு பாடிய அந்தப் பாடல் தொடர்கிறது.