அட இப்படியெல்லாம் நடக்குதே…? சிம்பு பாடல் பற்றி கௌதம் மேனன்..!


அட இப்படியெல்லாம் நடக்குதே…? சிம்பு பாடல் பற்றி கௌதம் மேனன்..!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்க அச்சம் என்பது மடமையடா படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.

ஏ.ஆர். இசையைமைத்துள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள, தள்ளி போகாதே என்ற பாடலை மட்டும் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிட்டனர்.

இன்று வரை இப்பாடலை இணையத்தில் 1 கோடி வரை பேர் பார்த்துள்ளனர். இது தமிழ் சினிமாவின் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“என்ன ஒரு அதிசயம். இப்படி எல்லாம் நடக்குதே. தள்ளிப்போகாதே பாடல் காட்சியை நான் இன்றுதான் துருக்கி நாட்டில் படமாக்கி கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தின் பாட்டையும் துருக்கியில் படமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அதில் கௌதம் மேனன் ஆடியோ ஆட்டம் இதோ…