சூர்யா படத்தில் ஹோம்லி அனுஷ்கா.. கிளாமர் ஸ்ருதி.!


சூர்யா படத்தில் ஹோம்லி அனுஷ்கா.. கிளாமர் ஸ்ருதி.!

‘ஆறு’, ‘வேல்’ ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யா, ஹரி ஐந்தாவது முறையாக இணைந்தாலும், ‘சிங்கம்’ படத்தின் தொடர் பாகத்திற்காக மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் காரைக்குடியில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் பாரிஸ் நாடுகளிலும் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பாகத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கின்றனர். முதல் இரண்டு பாகத்தில் சூர்யாவின் காதலியாக வந்த அனுஷ்கா, இதில் அவரது மனைவியாக நடிக்கிறாராம்.

எனவே கிராமத்து பாணியில் இல்லத்தரசியாக சேலை கட்டிக் கொண்டு நடிக்க இருக்கிறார். இதனால், கிளாமருக்கு நான் கியாரண்டி என காத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.