அதிரடி மாற்றங்களுடன் சூர்யாவின் சிங்கம் 3..!


அதிரடி மாற்றங்களுடன் சூர்யாவின் சிங்கம் 3..!

சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ஹரி இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இருவரும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வருகிற ஜனவரி 7ஆம் தேதி நள்ளிரவில் வெளியாகும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிகிறது.

‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக இது வெளியாவதால் ‘சிங்கம் 3’தான் இப்படத்தின் டைட்டில் என்று பலரும் காத்திருக்க, இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களை சூர்யா சுற்றலில் விட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.