தூத்துக்குடி இல்லையா?? ஹரியின் சிங்கம் 3 அதிர்ச்சி!


தூத்துக்குடி இல்லையா?? ஹரியின் சிங்கம் 3 அதிர்ச்சி!

சூர்யா தற்போது ஹரி இயக்கும் ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக விசாகப்பட்டினத்தில் நடந்து வந்தது.

இதனையடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்றுமுதல் காரைக்குடியில் தொடங்கவிருக்கிறது.

பெரும்பாலும் தூத்துக்குடி பகுதியில் தன் படக்காட்சிகளை படமாக்கும் ஹரி தற்போது காரைக்குடி பக்கம் தாவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதி, சூரி, பாடகர் கிரிஷ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.