சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் ‘சிங்கம் 3’ படக்குழுவினர்..!


சூர்யா பிறந்தநாளை குறிவைக்கும் ‘சிங்கம் 3’ படக்குழுவினர்..!

ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய தொடர் வெற்றிகளை தொடர்ந்து சூர்யாவுடன் ஹரி இணைந்துள்ள படம் ‘எஸ் 3’.

இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், ராதாரவி, நாசர், ராதிகா சரத்குமார், சுமித்ரா, யுவராணி, சூரி, ரோபா சங்கர், சாம்ஸ், க்ரிஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை சூர்யாவின் பிறந்த நாள் (ஜுலை 23) அன்றும், படத்தை ஆயுத பூஜை திருநாளில் வெளியிடவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.