‘நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்…’ ரஜினி பற்றி க்ரிஷ்!


‘நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்…’ ரஜினி பற்றி க்ரிஷ்!

கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் பாடகராக அறிமுகமானார் க்ரிஷ். இப்படத்தில் இவர் பாடிய ‘மஞ்சள் வெயில்…’ பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்பாடலை கேட்பவரெல்லாம் யாருடை குரல்? என்று கேட்க தொடங்கிவிட்டனர். நிறைய படங்களில் பின்னணி பாடிய இவர் சமீபத்தில் வெளியான ‘புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம்’ படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவரது நீ…ண்ட நாள் ஆசை ஒன்று தற்போது நிறைவேறியுள்ளதாம்.

அதாவது இவருக்கு தலைவர் ரஜினியை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே ரஜினிக்கு இந்த ஆசையை தெரியப்படுத்தியுள்ளார். எனவே சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு க்ரிஷ்ஷை வரச் சொன்னராம் ரஜினி.

இந்த சந்திப்பை தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் க்ரிஷ், அதில்… என் கனவு நிஜமானது. ரஜினியை சந்தித்து ஆசிபெற்றேன். நான் சந்தித்த மனிதர்களில் மிகச்சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இதையே தன் ட்விட்டர் பக்கத்தில் ப்ரொபைல் படமாக மாற்றியுள்ளார் க்ரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.