‘மாரி’ ஒர்க்அவுட் ஆகல.. ‘படை வீரன்’ கை கொடுப்பாரா…?


‘மாரி’ ஒர்க்அவுட் ஆகல.. ‘படை வீரன்’ கை கொடுப்பாரா…?

இந்தியாவின் பிரபல பாடகர் கே.ஜே.ஜேசுதாஸின் மகனும் பாடகருமான விஜய் ஜேசுதாஸ் தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் நடித்த ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

படம் சுமாரான வரவேற்பை பெற்றபோதிலும், சாந்தமான முகம் கொண்ட இவருக்கு வில்லன் வேடம் செட் ஆகவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர்.

எனவே, ‘படைவீரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம் விஜய் ஜேசுதாஸ்.

வில்லன் கவிழ்த்து விட்டார். ஹீரோ கை கொடுப்பாரா? என்பதை பார்ப்போம்.