சிவகார்த்திகேயனை இயக்கும் அஜித் இயக்குனர்!


சிவகார்த்திகேயனை இயக்கும் அஜித் இயக்குனர்!

‘ரஜினிமுருகன்’ படம் வருமா? வராதா என எவருக்குமே தெரியாத நிலையில் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். புதிய படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவிருப்பதால் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜாவின் 24 ஏஎம் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது முற்றிலும் ஆக்ஷன் கலந்த படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ‘சிறுத்தை’, ‘வீரம்’ படங்களை இயக்கிய சிவா இயக்கவிருக்கிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.

தற்போது அஜித் நடித்துவரும் ‘வேதாளம்’ படத்தை இயக்கி வருகிறார் சிவா. இதனை முடித்தபின் சிவகார்த்திகேயனுடன் இணையும் சிவா மீண்டும் அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.