அஜித்தை தொடர்ந்து சிவாஜி பாடல் வரியில் டைட்டில்!


அஜித்தை தொடர்ந்து சிவாஜி பாடல் வரியில் டைட்டில்!

தற்போதைய தமிழ் சினிமாவில் கஷ்டமான விஷயம் எது தெரியுமா? படத்திற்கு டயலாக்குகளை கூட எழுதிவிடலாம் போல. ஆனால் படத்திற்கு டைட்டில் வைப்பதுதான் ரொம்ப கஷ்டமாம். அதற்கு சமீபத்திய உதாரணங்களை கூறலாம். நீண்ட நாட்களுக்கு அஜித் படத்திற்கு ‘வேதாளம்’ என தலைப்பிட்டனர். ‘விஜய் 59’ படத்திற்கு இன்னும் டைட்டில் கிடைத்தபாடில்லை. தனுஷின் ‘விஐபி 2’ படத்திற்கு புதுத்தலைப்பை அக்டோபர் 16ஆம் வைக்கவுள்ளனர்.

இந்நிலையில் ஒரு புதுப்படத்திற்கு சிவாஜி கணேசனின் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம்பெற்ற பிரபல பாடல் வரியான ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ என்ற வரியை படத்தலைப்பாக்கி உள்ளனர். சமீபத்தில் அஜித் படப்பாடலான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற வரியை தலைப்பாக்கியது நாம் அறிந்ததே.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா நாயகனாக நடிக்கிறார். இவருடன் ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜே.டி.சக்கரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகி நேடு, மனோபாலா, அருள்தாஸ், மைம் கோபி, வளவன், ராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ராகேஷ் இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இப்படத்திற்கு பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ‘உறுமீன்’ இசையமைப்பாளர் அச்சு இசையமைக்கிறார். எக்ஸ்ட்ரா எண்டர்டெய்ண்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா வழங்க, பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இணைந்து தயாரிக்கிறார்.