‘தல-தளபதி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் மா.கா.பா.ஆனந்த்?


‘தல-தளபதி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் மா.கா.பா.ஆனந்த்?

மற்ற டிவி சேனல்களை விட விஜய் டிவிக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் கொஞ்சம் அதிகமே. விஜய் டிவியில் இருந்து புறப்பட்ட நிறைய நட்சத்திரங்கள் தற்போது தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துள்ளனர். யூகி சேது, சந்தானம், ஜெகன், ஜீவா, சிவகார்த்திகேயன், ரோபா சங்கர் முதல் மாகாபா ஆனந்த், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மனோகர் வரை அது தொடர்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தை ஆயுதபூஜை ஸ்பெஷலாக கொண்டுவர மும்முரமாக இருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி.

இந்நிலையில் ”வானவராயன் வல்லவராயன்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மா.கா.பா.ஆனந்த்… ‘பஞ்சு மிட்டாய்’, ‘அட்டி’, ‘நவரச திலகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘நவரச திலகம்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் ‘தல தளபதி’ என்றொரு புதிய படத்தில் சிவகார்த்திகேயனும், மா.கா.பா.ஆனந்தும் இணைந்து நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. எனவே இதுபற்றி மா.கா.பா.ஆனந்திடம் கேட்டதற்கு… “எனக்கே தெரியாம இப்படியொரு செய்தி வந்திட்டிருக்கா? சிவகார்த்திகேயன் என் ப்ரண்ட். அவருடன் நடிப்பது சந்தோஷம்தான். ஆனால் இது சம்பந்தமாக யாரும் என்னிடம் பேசவில்லை” என்றார்.