‘ரெமோ’வை மிஞ்சுமா…? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்..!


‘ரெமோ’வை மிஞ்சுமா…? சிவகார்த்திகேயனின் அடுத்த படம்..!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சவுண்ட் இன்ஜினியராக ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி பணியாற்றுகிறார்.

VFX பணிகளை பாகுபலி புகழ் கமலக்கண்ணன் மேற்கொள்கிறார். இவர்களுடன் பல முன்னணி கலைஞர்களும் பணியாற்றவிருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தில் இதனை மிஞ்சும் வகையில் பிரபல கலைஞர்களுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பஹத் பாசில் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

அனிருத் இசையமைக்க, ரெமோ தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவே இப்படத்தையும் தயாரிக்கிறார்.

கலை இயக்குநராக முத்துராஜ், ஒளிப்பதிவாளராக ராம்ஜி, எடிட்டராக விவேக் ஹர்சன், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, இசை வடிவமைப்பாளர்களாக விஷ்ணு கோவிந்த் மற்றும் ஸ்ரீசங்கர், விளம்பர வடிவமைப்பாளராக ட்யூனி ஜான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ரெமோ படத்தை முடித்துவிட்டு, இதன் படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார் சிவகார்த்திகேயன்.