உதவும் உள்ளங்கள்… விஷால், சிவகார்த்திகேயன், ராதிகா..!


உதவும் உள்ளங்கள்… விஷால், சிவகார்த்திகேயன், ராதிகா..!

ரத்தக் கண்ணீர், தூக்குமேடை உள்ளிட்ட பட படங்களில் பின்னணி பாடியவர் பழம்பெரும் பாடகி சரளா.

ஆனால் இன்று எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறார்.

இதனையறிந்த விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம், மாதந்தோறும், ரூ. 5,000 ரூபாய் நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இது ஒரும் புறம் இருக்க, மற்றொரு புறம் சிவகார்த்திகேயன் ராதிகா உள்ளிட்டோர் மற்றொரு கலைஞரின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர்.

இரண்டு முறை தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். ஒரு விருது அவரது மறைவுக்கு பிறகு அண்மையில் விசாரணை படத்திற்காக கிடைத்தது.

கிஷோரின் குடும்பம் மற்றும் அவரது தந்தை ஆதரவின்றி பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதனையறிந்த சிவகார்த்திகேயன் ரூ. 2 லட்சமும், நடிகை ராதிகா சரத்குமார் ரூ. 1 லட்சமும் கொடுத்து உதவியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திற்கு கிஷோர் எடிட்டிங் செய்திருந்தார் என்பது தாங்கள் அறிந்ததே.