மீண்டும் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி… ஹாட்ரிக் ஹிட் கன்பார்ம்..!


மீண்டும் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி… ஹாட்ரிக் ஹிட் கன்பார்ம்..!

தன்னுடைய எல்லா படங்கள் மூலமும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுத் தந்தவர் சிவகார்த்திகேயன்.

முதலில் மெதுவாக சென்றுக் கொண்டிருந்த இவரது மார்கெட் ஜெட் வேகத்தில் உயரக் காரணம் பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம்தான்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த சூரி, இமான் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

எனவே, மீண்டும், ‘ரஜினிமுருகன்’ படத்தில் இவர்கள் இணைந்தனர். பொதுவாக பிரச்சினைகளை எதிர்க்கொண்ட படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. ஆனால் இப்படம் வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றி கொடுக்க சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் சூரி மற்றும் இமான் நிச்சயம் இடம்பெறுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வரும் சிவா, அடுத்து மோகன் ராஜா படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.