ரசிகர்களுக்காக ரூட்டை மாற்றும் சிவகார்த்திகேயன்!


ரசிகர்களுக்காக ரூட்டை மாற்றும் சிவகார்த்திகேயன்!

‘மெரினா’ படத்தில் நாயகனாக தொடங்கி இன்று வரை வெற்றிப்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளிவந்த ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இதன்பின்னர் வெளிவந்த ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது உருவாகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படமும் நன்றாக வந்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக குடும்பங்களில் செல்லப்பிள்ளையாக ஆகிவிட்ட சிவகார்த்திகேயனிடம் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவரது நகைச்சுவையைதானாம். இதனை தற்போதுதான் நன்கு உணர்ந்துள்ளாராம் சிவகார்த்திகேயன். எனவே குட்டீஸ்களுக்காகவும் பெண் ரசிகைகளுக்காகவும் காமெடியை படத்தில் தூக்கலாக வைக்க சொல்லியுள்ளாராம். எனவே இனி நடிக்கவிருக்கும் புதுப்படங்களில் காமெடியுடன் கலந்த ஆக்ஷன் காட்சிகளை வலியுறுத்தவிருக்கிறாராம் ‘ரைசிங் ஸ்டார்’ சிவகார்த்திகேயன்.