அஜித்துக்கு ஆலுமா; சிவகார்த்திகேயனுக்கு ……..? அடம் பிடிக்கும் அனிருத்..!


அஜித்துக்கு ஆலுமா; சிவகார்த்திகேயனுக்கு ……..? அடம் பிடிக்கும் அனிருத்..!

வித்தியாசமான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடித்து விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ரெமோ. இதில் இவரது ராசியான ஜோடி கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

புது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, ஆர் டி ராஜா பிரம்மாண்டாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தன் நண்பர் சிவாவுக்காக அதிரடி பாடல்களை உருவாக்கி வரும் அனிருத், குத்து பாடலையும் விட்டு வைக்கவில்லையாம்.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த அஜித்தின் ஆலுமா டோலுமா போன்ற ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறாராம். அடம் பிடித்து, இந்த பாடலை சிவகார்த்திகேயனையே பாடவும் வைத்துவிட்டாராம்.

மே மாதம் இறுதியில் ரெமோ பாடல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.