’சேதுபதி’யுடன் ஈகோ இல்லை என நிரூபித்த ‘ரெமோ’ நாயகன்..!


’சேதுபதி’யுடன் ஈகோ இல்லை என நிரூபித்த ‘ரெமோ’ நாயகன்..!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு நடிகருக்கு போட்டியாக இன்னொரு நடிகரை ரசிகர்களே உருவாக்கி விடுகிறார்கள். எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் தொடங்கிய இந்த ஒப்பீடு இன்று வரை தொடர்கிறது.

கமல்-ரஜினி, விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் என தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் வரை நீள்கிறது. (அட இவர்களின் பெயர் கூட நீளமாக மேட்ச் ஆகி இருக்கிறதே..)

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் பிறந்த நாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுபோல் இன்று வெளியாகியுள்ள சேதுபதி படத்திற்கு விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரெமோ சிவகார்த்திகேயன்.

இதன் மூலம் இவர்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என நிரூபித்துள்ளனர். இதை ரசிகர்கள் என்று புரிந்து கொள்ள போகிறார்களோ?