மாஜி நடிகைகளை நோட்டமிடும் சிவகார்த்திகேயன்…!


மாஜி நடிகைகளை நோட்டமிடும் சிவகார்த்திகேயன்…!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் பெண் வேடம் உள்ளிட்ட பல வேடங்களில் கலக்கவிருக்கிறார் சிவா.

இதில் டாக்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷை கவர்வதற்காக நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவா. எனவே, பெண்களை போன்று பாடி லாங்குவேஜை கொண்டுவர வேண்டும் என்பதற்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

மேலும் தன் மனம் கவர்ந்த மாஜி நடிகைகளின் படங்களை நிறைய பார்த்து வருகிறாராம். அவர்களின் உடல் அசைவுகள், நளினம் ஆகியவற்றை கற்று அவர்களை போல் நடிக்க பயிற்சியும் செய்து வருகிறாராம்.

வழக்கம்போல் இப்படத்திலும் சிவகார்த்திகேயனின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்கிறது படக்குழு. அதுவும் பெண் கேரக்டரில் நிச்சயம் சிவா ஜொலிப்பார் என்றும் கூறிவருகின்றனர்.

அட… ரசிகர்களுக்கும் அதானே வேணும்…