சிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…?


சிவகார்த்திகேயனை சீண்டிப் பார்க்கிறாரா அந்த பிரமுகர்…?

மெரினா படத்தில் அறிமுகமாகி இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்துள்ளர் சிவகார்த்திகேயன்.

தற்போது இவரது சம்பளமும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

ரஜினிமுருகன் படம் வரை, மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த, இவர் தற்போது உருவாகும் ரெமோ மற்றும் மோகன் ராஜா இயக்கும் படங்களில் தன் நண்பர் ஆர் டி ராஜாவின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

அதற்கு ரஜினிமுருகன் படம் வெளியீட்டில் தாமதமானதால், தன் சம்பளம் மைனசில் சென்றாக சிவா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் இதுகுறித்து கூறியதாவது…

‘ரஜினிமுருகனால் தனக்கு நஷ்டம். அதனால்தான் சொந்தப்படம் எடுக்கிறேன் என்று கூறும் சிவா, மெரீனா படம் நடிக்கும் சமயத்திலே இப்படி சொல்லியிருக்கலாமே.

அதன் பின்னர் அவரை உயர்வுக்கு கொண்டு வந்தது தயாரிப்பாளர்கள்தானே?“ என கூறியுள்ளார்.