எல்லாம் கிடைத்த சிவகார்த்திகேயனுக்கு ‘அது’ மட்டும் கிடைக்கல!


எல்லாம் கிடைத்த சிவகார்த்திகேயனுக்கு ‘அது’ மட்டும் கிடைக்கல!

சிவகார்த்திகேயன் நடித்து இதுவரை ஒரு டஜன் படங்கள் கூட வெளியாகவில்லை. ஏன் இன்னும் பத்து படங்களை கூட எட்டாத நிலையில் இன்று முன்னணி ஹீரோக்களின் வரிசையை எட்டி இருக்கிறார். இவரது ‘எதிர்நீச்சல்’ படத்தை தொடர்ந்து வந்த படங்கள் அனைத்திற்கும் எதிர்பார்ப்பு ஒவ்வொரு முறையும் கூடிக்கொண்டே வருகிறது.

தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இவரது ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த படப்பிடிப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டன. அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்க 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். ஐ படத்தின் மேக்கப் கலைஞர், ரசூல் பூக்குட்டி இப்படியாக அமைந்துள்ள இவரது கூட்டணியை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

இந்த பலமான கூட்டணியில் ஒரு டாப் ஹீரோயின் சேர்ந்தால்தானே நன்றாக இருக்கும். எனவே அதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவிருப்பதால் ஹீரோயின் கால்ஷீட் அதிகநாள் தேவைப்படுகிறதாம். ஆனால் ஒரு ஹீரோயினும் இதுவரை சிக்கவில்லையாம். இப்படியாக சிவகார்த்திகேயன் ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தது. ஆனால் அது… அட… அதான் ஹீரோயின் மட்டும் கிடைக்கலையாம்.