சிவகார்த்திகேயனுக்கு பெருகும் ட்விட்டர் சிஸ்டர்ஸ்!


சிவகார்த்திகேயனுக்கு பெருகும் ட்விட்டர் சிஸ்டர்ஸ்!

ஒரு ஹீரோ என்றால் அவருக்கு ஆண், பெண் ரசிகைகள் இருப்பது வழக்கம்தான். ஆண்கள் அந்த ஹீரோவை தங்களை வழிநடத்தும் ஒரு தலைவர் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பார்கள். ஆனால் பெண்களோ அவரை தங்கள் கனவு நாயகனாக நினைத்துக் கொள்வார்கள்.

இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ள சிவகார்த்திகேயனுக்கு சற்று வித்தியாசமான ரசிகைகள் கிடைத்துள்ளனர். இவர் டிவி ஷோக்களில் தோன்றியபோதே இவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். மேலும் இவருக்கு இல்லத்தரசிகளின் ஆதரவும் பெருகியது. இப்போது இவர் ஹீரோவாகி விட்டதால் அந்த இளம் ரசிகைகள் இவரை அன்போடு அண்ணா என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

இதனிடையில் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் தளத்தில் இவரை பாலோ செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் பெண் ரசிகைகளில் 70 சதவிகிதம் பேர் இவரை தங்களின் உடன் பிறவா சகோதரனாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இவரை அண்ணா.. தம்பி என்றே குறிப்பிட்டு ட்வீட் செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றிக்கு வாழ்த்து சொல்லும்படி கோரிக்கையும் வைக்கின்றனர். சிவகார்த்திகேயனும் சற்றும் சளைக்காமல் தன் ட்விட்டர் சிஸ்டர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்.