‘சிவகார்த்திகேயன் வம்பு வழக்கில் சேர்க்கப்படுவாரா?’ வக்காலத்து வாங்கும் சிம்பு!


‘சிவகார்த்திகேயன் வம்பு வழக்கில் சேர்க்கப்படுவாரா?’ வக்காலத்து வாங்கும் சிம்பு!

பீப் பாடல் இணையத்தில் வெளியானது முதல் பல இன்னல்களை சந்தித்து வருகிறார் சிம்பு. இதனைத் தொடர்ந்து பல வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் நேற்று சிம்புவை கைது செய்யத் தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் இதை யார் வெளியிட்டது என்ற கேள்வியும் அவர்தானே நியாயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற விவாதமும் முன் வைக்கப்பட்டது.

இதனிடையில் சிம்புவின் அனுமதியில்லாமல் அப்பாடலை ஒரு முன்னணி நடிகர் ஒருவர் வெளியிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கியது. அந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்றும் கூறப்பட்டது. அப்படி சிவாதான் வெளியிட்டாரென்றால் முக்கிய வழக்கே அவர் மீதுதான் பாயும். யார் வெளியிட்டது என ஒரு தட்டில் தெரிந்துகொள்ள முடியும் போலீசாரால்..

ஆனால் இவ்வளவு இழுபடுகிறதே எனப் பார்த்தால் இவர் விளையாட்டாக அனுப்பிய ஃபார்வார்ட் பாட்டாம். அட உண்மைதானா அது என நம்புவதற்குள்

இதனை மறுத்துள்ள சிம்பு … ”நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியாகியுள்ள பீப் பாடலை லீக் செய்யவில்லை. வேண்டாதவர்கள் சிலர் அவரது பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

‘பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன். எங்கும் ஓடி ஒளியப் போவதில்லை. கடவுள் இருக்கிறார். அவர் என்னை காப்பாற்றுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் சிம்பு.