நீயாவது செய்தாயே சிவகார்த்திகேயா..?


நீயாவது செய்தாயே சிவகார்த்திகேயா..?

சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளை பேய் மழை ஆட்டுவித்து வருகிறது. ஓரிரு நாட்கள் மழை விட்டது போல இருந்தாலும் மீண்டும் மழை துவங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பள்ளிகளில் தஞ்சம் கொண்டுள்ளனர்.

மீடியாக்கள் சென்னையை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக தொடர்ந்து காண்பித்தாலும் கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதனையறிந்த சிவகார்த்திகேயன், தானாகவே முன்வந்து 1000க்கும் மேற்பட்டோருக்கு போர்வை வழங்கியுள்ளார்.

தற்போது ‘ரஜினிமுருகன்’ படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.