பிரம்மாண்ட செட்டில் சிவகார்த்திகேயனின் அறிமுக பாடல்!


பிரம்மாண்ட செட்டில் சிவகார்த்திகேயனின் அறிமுக பாடல்!

‘ரஜினிமுருகன்’ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டி பணியாற்றவிருக்கிறார். இதன் படப்பிடிப்பை வருகிற நவம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ளனர்.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அவரது அறிமுக காட்சிகள் சாதாரணமாகவே இருந்தன. ஆனால் இப்புதிய படத்தில் பிரம்மாண்ட செட் போட்டு அறிமுக காட்சியை பாடலாக கொடுக்கவிருக்கிறார்களாம். இதில் இவருடன் கீர்த்தி சுரேஷும் நடனமாடவிருக்கிறாராம். இந்த நடன காட்சியை நடன இயக்குனர் ராஜு சுந்தரம் அமைக்கவிருக்கிறார். அப்படியென்றால் கண்டிப்பாக அவரும் இப்பாடலில் தோன்றுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

மேலும் இப்படத்தின் சில காட்சிகளை சென்னை மெட்ரோ ரயிலில் படமாக்க இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.