என்னது? சிவகார்த்திகேயன் படத்தில் விக்ரம் வில்லனா?


என்னது? சிவகார்த்திகேயன் படத்தில் விக்ரம் வில்லனா?

இந்த டைட்டிலை நீங்க படிச்சா ஒண்ணு சிரிப்பிங்க… இல்லேன்னா கோவப்படுவீங்க.. ஆனா விஷயம் இருக்கு பாஸ்… இதை சிவகார்த்திகேயனே சொல்லியிருக்காரு.

சிவகார்த்திகேயன் நடிச்ச ரஜினிமுருகன் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

“நான் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்” எல்லா ரசிகர்கள்கிட்டயும் ரீச்சாகி இருக்கு. இதற்கு முக்கிய காரணம் படத்தோட டைட்டில்தான்.

சின்ன வயசுலே இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன் நான். இந்த தலைப்பை அவரோட பெர்மிஷனடோத்தான் வச்சிருக்கோம்.

ரஜினி சார் பேன்ஸ் அவங்க பெயருக்கு முன்னாடி ரஜினி பேர சேர்த்து வச்சிருப்பாங்க. அதனால எனக்கு பயம் இருந்துச்சு. ஆனா இப்போ அவங்களும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ரஜினி சாரை எல்லாருக்கும் பிடிக்கும்.

முக்கியமாக குழந்தைகளுக்கு பிடிக்கும். இப்போ அவரோட ரசிகனான என்னையும் குழந்தைகளுக்கு பிடிச்சிருக்கு. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

நான் ஒரு டைம் விக்ரம் சாரை இண்டர்வியூ எடுத்தேன். அப்போ அவரு சொன்னாரு… ’ஒருநாள் நீ ஹீரோவா வருவ, அப்போ ஒரு படத்துல உனக்கு வில்லனா நான் நடிப்பேன் சொன்னாரு. அப்படி ஒரு ஸ்டோரி கிடைச்சா கண்டிப்பாக விக்ரம் சாரு கிட்ட வில்லனா நடிக்க நான் கேட்பேன்.

எல்லாரும் ‘ரஜினிமுருகன்’ படத்தை பேமிலியோட வந்து தியேட்டர்ல பாருங்க அப்படின்னு கேட்டுக்கிறேன்” என்றார் சிவா.