அஜித் படத்தயாரிப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்!


அஜித் படத்தயாரிப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

நேற்று தீபாவளி ஸ்பெஷலாக அஜித் நடித்த ‘வேதாளம்’ படம் வெளியானது. சிவா இயக்கிய இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், சூரி, மயில்சாமி, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை போல படத்திற்கும் தெறிக்கும் வரவேற்பு இருந்து வருகிறது. ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியதால் இவரின் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏ. எம் ரத்னம் இளம் இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கவிருக்கிறாராம். இவரின் முதல் படத்தை நானும் ரௌடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இவரின் நானும் ரௌடிதான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது நாம் அறிந்ததே.

இப்புதியபடத்தில் நாயகனாக நடிக்க சிவகர்த்திகேயனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தையும் விரைவில் தொடங்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.