விஜய்யின் ‘புலி’ டிசைனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!


விஜய்யின் ‘புலி’ டிசைனருடன் இணைந்த சிவகார்த்திகேயன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி, சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த ‘ரஜினிமுருகன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இந்த புதிய படத்திற்கான போட்டோஷூட் சென்னையில் நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரெயிலில் சிவகார்த்திகேயனின் அறிமுகப்பாடலுடன் நவம்பர் 2ஆம் தேதி இதன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக நடத்தவிருக்கிறார்களாம். எனவே 2016ஆம் ஆண்டு பிப்ரவரிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ ஜோடி கீர்த்திசுரேஷ் இப்படத்திலும் இணைகிறார். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யின் ‘புலி’ படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட கமலக்கண்ணன் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை கவனிக்கிறார். அனிருத் இசையமைக்க சிவாவின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்