அஜித் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!


அஜித் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, ராஜ்கிரண், மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மட்டும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ரூ. 40 கோடிக்கு வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தானே தயாரித்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்  தற்போது புதிய செய்தியாக, இதுநாள் வரையில் பெரிய இயக்குனர்களிடம் கைகோர்க்காத சிவகார்த்திகேயன் இம்முறை பெரிய இயக்குனருடன் இணையவிருக்கிறாராம்.

‘சிறுத்தை’, ‘வீரம்’ படங்களை தொடர்ந்து தற்போது அஜித்தின் ‘அச்சமில்லை’ படத்தை இயக்கிவரும் சிவா அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஏற்றவாறு காமெடி கலந்த அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகவுள்ளதாம்.