கமல், பிரஷாந்த் சாதித்ததை சிவகார்த்திகேயன் முறியடிப்பாரா..?


கமல், பிரஷாந்த் சாதித்ததை சிவகார்த்திகேயன் முறியடிப்பாரா..?

என்னதான் நம்ம ஹீரோஸ் பல வேஷங்கள் போட்டாலும், அவர்கள் பெண் வேஷம் போட்டால் பார்க்க சகிக்காது.

ஆனால், ஆணழகன் படத்தில் பிரசாந்த், அவ்வை சண்முகி படத்தில் கமல் ஆகியோர் அச்சு அசலாக பெண் போலவே வேடம் ஏற்றிருந்தனர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இவர்கள் இதே தோற்றத்திலே நடித்து ரசிகர்கள் கவர்ந்தனர்.

இவர்களை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனும் இதே பாணியை தன் ரெமோ படத்தில் கடைப்பிடிக்கிறாராம்.

பெண் வேடம் மட்டுமல்லாது, இளைஞன் கேரக்டர் மற்றும் வயதான தாத்தா கேரக்டரிலும் நடிக்கிறாராம்.

நிஜமான பெண் போலவே சிவா நடித்துவருவதால் படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கிறார்களாம்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு மேக்கப் போட்ட ‘வீட்டா’ நிறுவனம்தான் இப்படத்திலும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.