சிவகார்த்திகேயனின் புதுப்பட பணிகள் துவக்கம்!


சிவகார்த்திகேயனின் புதுப்பட பணிகள் துவக்கம்!

‘பிரபலம் என்றாலே ப்ராப்ளம்தானே…’ என்ற வாக்கியம் தமிழக இளைஞர்களிடையே பிரபலமாக பரவி வருகிறது. அது நம் சிவகார்த்திகேயனுக்கு நன்றாகவே பொருந்து வருகிறது. அவர் பிரபலமாகி வரும்போதே பிரச்சினைகள் உருவெடுக்க தொடங்கிவிட்டன.

சில மாதங்களுக்கு முன்னால் மதுரை விமான நிலையத்தில் அவர் மீது தாக்குதல் நடைபெற்றது. இதனிடையில் அவர் நடித்து முடித்த ‘ரஜினிமுருகன்’ படம் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு இன்னும் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்.பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டியும் மற்றும் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. எனவே, விரைவில் படப்பிடிப்பை தொடங்கி படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் விருந்தாக்க திட்டமிட்டுள்ளனர்.