ஜூலை முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி!


ஜூலை முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி!

ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தில் நாயகனாக தொடங்கி இன்று வரை வெற்றிப்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவர் இவர்.

அதன்பின்னர் வெளிவந்த ‘மனம் கொத்தி பறவை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களுக்கு முதலுக்கு மோசமில்லாமல் சுமாரான வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் நடித்த ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களின் வெற்றி இவரை முன்னணி நாயகன் அந்தஸ்துக்கு மெல்ல மெல்ல உயர்த்தியது. பின்னர் வெளியான ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களுக்கு இருந்த வரவேற்பு முன்னணி நடிகர்களை பயமுறுத்தியது.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை (ஜூலை 1ஆம் தேதி) மாலை 4 மணியளவில் தன் அடுத்த படத்தின் அறிவிப்பை கூறவிருப்பதாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இதனையறிந்த இவரது ரசிகர்கள் ஆனந்தத்தில் மழையில் நனைந்து வருகின்றனர்.