‘நம்பி வந்தா எப்படி ஏமாத்த முடியும்…? சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!


‘நம்பி வந்தா எப்படி ஏமாத்த முடியும்…? சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்திற்காக கீர்த்தியுடன் டூயட் பாடி வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர் டி ராஜா மிகுந்த பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

பொதுவாக ஆக்ஷன் படங்கள்தான் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும். இப்படம் எந்த வகையான படம் என சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளளார். அதில்…

“ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட முயற்சிக்கிறேன். ஆனால் அதிக ரிஸ்க் எடுக்க தயக்கமாக இருக்கிறது.

ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது ஜாலியாக இருக்கத்தான். அந்த 2 மணி நேரம் அவர்கள் கவலைகளை மறந்து சிரிக்க வேண்டும். அதைதான் நானும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறோம்.

என்னை நம்பி வருபவர்களை எப்படி நான் ஏமாத்த முடியும்.? எனவே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ரெமோ படமும் அப்படியான ஒரு படம்தான்” என்றார்.

சிவா தம்பியை நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க…