சிவகார்த்திகேயன் ஜோடியாக கமல் மகள்!


சிவகார்த்திகேயன் ஜோடியாக கமல் மகள்!

‘ரஜினிமுருகன்’ படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் ஹீரோயின் கிடைக்காத காரணத்தாலும் வேறு சில காரணங்களாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் தள்ளிக்கொண்டே போகிறது.

‘மான் கராத்தே’ படத்தில் இவருடன் ஹன்சிகா நடித்தபோது… இவருக்கு ஜோடி அவரா? என்ற ஆச்சரிய கேள்விகள் கோலிவுட்டில் எழுந்தது. ஆனால், சிவகார்த்திகேயனின் மார்கெட் தற்போது உயர்ந்துள்ளதால் அதுபோன்ற கேள்விகள் இப்போது இல்லை. அப்படியிருந்தும் ஏன் தாமதமாகிறது? என்றால்… இவர்கள் தேடும் நாயகிகள் எல்லாம் கால்ஷீட் கொடுக்கமுடியாமல் இருக்கிறார்களாம்.

விஜய், சூர்யா, தனுஷ் படங்களில் நடித்துவரும் சமந்தாவிடம் கேட்டு பார்த்தும் அவர் ‘முடியாது’ என்று கூறிவிட்டாராம். எனவே விஜய், அஜித் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். அவரும் பிஸி என்று கூறியிருக்கிறார். இவர்கள் தொடர்ந்து வலியுறுத்த… அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் தர பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

எனவே சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க கூடும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்.