சிவகார்த்திகேயன் இடத்தை ஜி.வி. பிரகாஷ் பிடித்தது எப்படி.?


சிவகார்த்திகேயன் இடத்தை ஜி.வி. பிரகாஷ் பிடித்தது எப்படி.?

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். இவர் இயக்கிய ‘மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தார்.

தற்போது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் இரண்டாம் பாகத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறாராம். எனவே, சிவகார்த்திகேயனை இயக்குனர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நாயகனோ தன் சம்பளத்தை கோடியில் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சிவகார்த்திகேயன் கேரக்டரில் ஜிவி பிரகாஷை ஒப்பந்தம் செய்து விட்டாராம் இயக்குனர்.

இதில் நாயகியாக லட்சுமி மேனன் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.