‘அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்…’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!


‘அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்…’ சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!

பிரபல இயக்குனரின் மகனும், நஸ்ரியாவின் கணவருமான பஹத் பாசில், முதன் முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கின்றனர்.

இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பது குறித்து பஹத் பாசில் கூறும்போது… “மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானது” என்று கூறியிருந்தார்.

இதனையறிந்த சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் கூறியதாவது…

“மிகச்சிறந்த நடிகரிடம் இருந்து என்னைப் பற்றி இப்படியான வார்த்தைகள் வந்ததை பெருமையாக நினைக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

பஹத்திடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.