‘இயக்குனர் பாலா படத்தில் நடிக்கமாட்டேன்’ – சிவகார்த்திகேயன்


‘இயக்குனர் பாலா படத்தில் நடிக்கமாட்டேன்’ – சிவகார்த்திகேயன்

‘காக்கி சட்டை’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படம் வராதா? என்று காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். தற்போது இவர் நடித்து வெளிவரத் தயாராகியிருக்கும் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்க, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக ஆர். டி. ராஜா தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். விரைவில் கதாநாயகி உட்பட மற்ற கலைஞர்கள் ஒப்பந்தமானவுடன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார். அப்போது தனது அடுத்த படம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்… “எனக்கு ‘பரதேசி’ மாதிரி படங்களில் நடிக்க பிடிக்காது. ‘ஓகே கண்மணி’ மாதிரியான படங்கள் என்றால் எனக்கு ஓகேதான். நான் ஏற்கெனவே ரொம்ப அழகு. இதுல பரதேசி மாதிரியான படங்களில் நடித்தால் பாலா சார் முடியெல்லாம் வெட்டிவிடுவார். அப்புறம் என்னை பார்க்க நன்றாகவா இருக்கும்?” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.