சிவகார்த்திகேயனை பாடாய்படுத்தும் பாபா..!


சிவகார்த்திகேயனை பாடாய்படுத்தும் பாபா..!

‘ரஜினிமுருகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவா. அப்போது அவர் பேசியதாவது…

‘காமெடி, ரொமான்ஸ் சீன்ஸ் எல்லாம் பிரச்சினை இல்லை. அதுல கூ ஈசியா நடிச்சுவேன்.

ஆனால் டான்ஸ் மட்டும்தான் டென்ஷனா இருக்கிறது. அதிலும் பாபா மாஸ்டர்தான் இந்த பாட்டின் நடன இயக்குனர் என்று தெரிந்தால் பயம் அதிகமாக வந்துவிடும்.

சரியா ஸ்டெப் போடலேன்னா விடவே மாட்டார். என்னை கட்டித் தொங்க விட்டுவார்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.