சீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…!


சீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…!

ஒரு படத்தை முடித்துவிட்ட பின்பே தனது அடுத்த படத்தை ஒப்புக் கொண்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவருவது இவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

தற்போது சிவா, நடித்து வரும் ரெமோ படத்தை இவரது நண்பர் ராஜா 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பாக தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் இவரது நண்பரே தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவை தவிர்த்து, மேலும் இரண்டு புதிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒன்றை ரஜினி முருகன் புகழ் பொன்ராம் இயக்கவுள்ளாராம். இவர்களின் கூட்டணி வெற்றிக்கூட்டணி என இரண்டு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இதனையடுத்து, ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவா.