கமலை எதிர்க்கும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்!


கமலை எதிர்க்கும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்!

‘உத்தமவில்லன்’ படத்தை தொடர்ந்து ‘த்ரிஷ்யம்’ ரீமேக் படமான ‘பாபநாசம்’ படத்தில் நடித்துள்ளார் கமல். ஒரிஜினல் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். கெளதமி, சார்லி, கலாபவன் மணி, டெல்லி கணேஷ், நிவேதா தாமஸ், பேபி எஸ்தர், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடித்துள்ளார்.

படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜூலை மாதம் 17ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதே நாளில் தனுஷின் ‘மாரி’ படமும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படமும் வெளியாகவுள்ளது.

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து ‘மாரி’ படத்தில் நடித்துள்ளார் தனுஷ். பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.

திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ள படம் ‘ரஜினிமுருகன்’. பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின். பாடல்களும் டீசரும் சமீபத்தில் வெளியானது. இதற்கு கிடைத்த வரவேற்பில் இப்போதே படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளனர் இப்பட குழுவினர்.

தற்போது சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படத்தின் ரீலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர். இப்படமும் ரம்ஜான் தினமான ஜூலை 17-ந் தேதி இப்படம் திரைக்கும் வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் கமலை எதிர்க்க சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய இளம் ஹீரோக்கள் களம் இறங்கிவிட்டனர்.