‘விஜய் அவார்ட்ஸ்க்கு சோறு கொண்டாங்க’ – சிவகார்த்தி


‘விஜய் அவார்ட்ஸ்க்கு சோறு கொண்டாங்க’ – சிவகார்த்தி

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவார்ட்ஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் விழாவில் நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தேறின. எங்க வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயனை கொண்டாடி வருவது விஜய் டிவியின் வாடிக்கை. அது ஒன்றும் தவறல்ல. தன் பிள்ளையை கௌரப்படுத்தி தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்கை தக்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம்.

கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கண் கலங்கியதை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பினார்கள். அவரும் விருதை பெற்றபின் இவ்வாறு ஒளிப்பரப்பக் கூடும் என்று சொன்னார். ஆனால் இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை ஒளிப்பரப்புவார்களாக என்று தெரியவில்லை. ஒரு வேளை விஜய் அவார்ட்ஸ் ப்ளுப்பர்ஸ் என்ற வகையில் ஒளிப்பரப்ப வாய்ப்பிருக்கிறது.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…

“இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி முடிய அதிகாலை வரை கூட ஆகலாம். குடிக்கத் தண்ணீர் தரமாட்டார்கள். அடுத்த முறை இவ்விழாவுக்கு வரும்போது புளி சோறு, தக்காளி சோறு பார்சல் செய்து கொண்டு வாங்க” என்றார்.

எப்போதும் முதல் ஆளாக வந்து விழாவின் முடிவில் விடைபெறும் சிவகார்த்திகேயன் நேற்று துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருதை கொடுத்தபின் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அதுபோல ‘ரஜினி முருகன்’ படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால்அதற்கு முன்பே ட்விட்டரில் மாலை 6 மணிக்கே வெளியிட்டார்கள்.

சிவகார்த்திகேயன் பாஷையில சொன்னா… “இனிமே இப்படித்தான்… ஆங்…”